ஸ்ரீ
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சிறப்பு தன்வந்திரி ஹோமம்…
அந்த
காலத்தில் நமது முன்னோர்கள் கூறுவார்கள் ‘வீட்டைக் கட்டி பார்’ ‘கல்யாணத்தை முடித்து
பார்’ என்று. ஆம் இரண்டுமே வெகு சிரமமான விசேஷங்கள். ஆயினும் மக்கள் எப்படியாவது கடன்
உடன் வாங்கி இந்த விசேஷங்களை நடத்துகின்றனர். அதன் பின்னர் வாங்கிய கடன்களை அடைப்பதற்குள்
அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது.
இப்படி
ஒவ்வொருவரும் தங்களது அடிப்படை தேவைகளை நீண்ட கால கனவுகளோடு செய்து முடிக்கின்றனர்.
திருமணம் நடத்த வேண்டும் என்றாலும், வீட்டை கட்ட வேண்டும் என்றாலும் இன்றைக்கு மிகவும்
சிரமமான ஒரு காரியமாக உள்ளது. அன்றைக்கு கடன் உடன் பட்டு செய்தார்கள். இன்றைக்கு கடன்
பெறுவதற்கும் முடியாத நிலையில் உள்ளோம். உண்ண உணவு, உடுக்க துணி, இருக்க இருப்பிடம்
இப்படி இந்த மூன்று அடிப்படை தேவைகளின் விலையுமே உலகில் கட்டுபாடற்ற நிலைமையில் சென்று
கொண்டிருக்கிறது.
அதிலும்
எழை எளிய மக்களுக்கு கேட்கவே வேண்டாம் உண்ணும் உணவிற்கே போதாத காலமாக உள்ளது. அவர்கள்
எங்கே வீடு கட்டுவது, திருமணம் செய்வது.
இருந்தாலும்
ஒரு சிலர் எப்படியாகிலும் ஒரு வீட்டை கட்டியும், திருமணம் நடத்தியும் அதில் மனைவி,
குழந்தைகள், தாத்தா, பாட்டி என்று சந்தோஷமாக வாழவேண்டும் என்ற நியாயமான எண்ணங்களை மனதில்
சுமந்து கொண்டிருக்கும் மனநிலையில் உள்ளார்கள்.
நமது
மத்திய அரசும், மாநில அரசும் நல்ல நோக்கங்களுடன் மக்களின் நிலையை அறிந்து மேற்கண்ட
தேவைகளுக்கு பலவிதமான முயற்சிகளையும் மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார்கள் என்றாலும்
இந்தியாவில் பிறந்த அனைவரும் மற்றவர்களின் தேவைகைள், கஷ்டங்கள், பிரச்னைகள் ஆகியவற்றை
அறிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பது முக்கியமான கடமையாகும்.
மேற்கண்ட தேவைகள் மனித வாழ்வுக்கு ஒரு அத்தியாவசியமானது
என்பதை அனைவராலும் அறிய முடிகிறது. அந்த வகையில் நாமும் ஏதாகிலும் மேற்கண்ட காரணங்களுக்கு
பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறவும், உணவு பொருட்கள், (வெங்காயம்
உள்பட) மீதான விலை உயர்வுகள், ஆடை, ஆபரணங்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் கட்டுபாடற்ற
விலை உயர்வுகள் இது போன்ற வாழ்வின் அன்றாடத் தேவைகளின் விலையேற்றங்களால் மக்கள் பாதிக்கபட்டு
உடல் நோய் மற்றும் மன நோய்க்கு ஆளாகின்றனர்.
பாதிக்கும்
மக்கள் விரைவில் விரைவில் குணமடையவும், விலைகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவும், தகரம்
முதல் தங்கம் வரை விலை குறைந்து மக்கள் மகிழ்ச்சி பெறவும் வேண்டி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய
பீடத்தில் புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமை அன்று (21.9.2013) உலக மக்களின் கலியுகக்
கடவுளாக போற்றபடுகின்ற திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளுடன் ஸ்ரீ தன்வந்திரி மற்றும்
65 பரிவார தெய்வங்ககளின் அருள் கிடைத்து நாடு நலம்பெற காலை 11.00 மணியளவில் சிறப்பு
ஹோமங்களும், கூட்டு பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.
எனவே
அனைத்து தரப்பு மக்களும் இந்த அற்புதமான ஹோமத்திலும், கூட்டுபிரார்த்தனையிலும் பங்கேற்று
வையகம் தழைக்க வேண்டிடுவோம் வாருங்கள்…
தன்வந்திரி குடும்பத்தினர்
தொடர்புக்கு
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.
வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203
www.dhanvantripeedam.com
www.danvantripeedam.blogspot.in
E-mail : danvantripeedam@gmail.com
No comments:
Post a Comment