உலக நலன் கருதியும், உலக மக்களுக்கு தொழில், வியாபாரம், திருமணம், தம்பதிகள் ஒற்றுமை, குழந்தைபேறு, போன்ற பல காரணங்கள்
நிறைவேறவும், உலக நலன் கருதியும், க்ஷேத்திர அபிவிருத்தியை முன்னிட்டும், தோஷங்கள்,
பாபங்கள் நீக்கும் விதத்திலும் தினசரி நண்பகல் (அபிஜித் முகூர்த்த) வேளையில் மங்கள
வாத்தியத்துடன் விசேஷ வேத விற்பன்னர்களைக் கொண்டு, தன்வந்திரி பகவானிடம் சங்கல்பம்
செய்து, தன்வந்திரியை அழைத்து, தன்வந்திரியே கோ பூஜை செய்வதாக பாவித்து அந்த கோ பூஜைக்கு,
பீடத்தில் அமைந்துள்ள தெய்வங்களும், மகான்களும், குருமார்களும், சித்தர்களும் கலந்து
கொண்டு சிறப்பிக்கும் வகையில் காமதேனுவாக போற்றப்படுகின்ற கோமாதா என்கிற பசுவிற்கு
கோ பூஜையை விநாயக சதூர்த்தி நாளான இன்று முதல் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மற்றும் ஸ்வாமிகளின் துணைவியார் நிர்மலா அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது.
இந்த கோ பூஜையானது தினமும் நண்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறும். மேலும் இன்று விடியற்காலை 3 மணியளவில் கோ பூஜை துங்கக்கூடிய நாளில் பசு கன்று குட்டி ஈன்றது, அதற்கு கணபதி என்று பெயர் சூட்டப்பட்டது. கன்று குட்டியை ஈன்ற பசுவும் கோ பூஜையில் கலந்து கொண்டது என்பது தனி சிறப்பு ஆகும்.
|
கோ பூஜையை ஸ்வாமிகள் துவங்கி வைத்த காட்சி |
|
|
கோ பூஜையில் ஸ்வாமிகளின் துணைவியார் நிர்மலா அவர்கள் |
|
No comments:
Post a Comment