ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில்
உலக சுற்றுச் சூழல் தினம் 5.6.2013 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது
சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் மூலிகை வனம் |
சுத்தமாக வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் மூலிகை வனம் |
மூலிகை வனம் |
ஒவ்வொரு
ஆண்டும் ஜூன் 5ம் தேதி
உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) கொண்டாடப்படுகிறது. 2009ம் ஆண்டுக்கான உலக
சுற்றுச் சூழல் தினத்தை 'வானிலை
சவாலை எதிர்கொள்ள ஒன்றுபட வேண்டும்' என்ற
கருப்பொருளின் அடிப்படையில் கொண்டாட வேண்டும் என
ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்த நாளை சுற்றுச் சூழல்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய
நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும்
செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது.
உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல்
பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும்
உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல்
கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை
ஏற்படுத்துவதும் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.
மூலிகை வனத்தை சுத்தம் செய்தக் காட்சி |
எனவே ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில் ஒவ்வொரு வருடமும் உலகசுற்றுச்
சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய
தினத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் பீடத்தின் சேவாத்ரிகளும்,
பக்தர்களும் ஒன்றிணைந்து பீடம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களையும் சுத்தம் செய்து இத்தினத்தைக்
கொண்டாடி வருகின்றனர் தன்வந்திரி குடும்பத்தினர்.
‘இதுபோன்று அனைத்து
மக்களும் அவரவர் பகுதிகளை சுத்தம் செய்து வந்தாலே இயற்கை பாதிப்புகளிலிருந்து நமது
வருங்காலத் தலைமுறையினர் பாதுகாக்கப்படுவர்’ என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர
ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment