ஸ்ரீ தன்வந்திரி
ஆரோக்ய பீடத்தில்
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நிகும்பல யாகம் சிறப்பாக நடைபெற்றது
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக நலன் கருதி கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியுடன் 01.06.2013 சனிக்கிழமை காலை 08.30 மணியிலிருந்து
மாலை 4.00 மணி வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாபெரும் யாகத்தில் சுமார் 500 கிலோ மிளகாய் வற்றல், வேப்பெண்ணெய்,
கடுகு, நாயுருவி, நெய், தேன் போன்ற எண்ணற்ற மூலிகைகள், 100க்கும் மேற்பட்ட பழங்கள்,
புஷ்பங்கள், பட்டு வஸ்திரங்கள், நவ ரத்தினங்கள் மற்றும் செவ்வரளிப் பூக்கள் ஆகியவற்றைக்
கொண்டு நிகும்பல யாகம் நடைபெற்றது.
மேலும் இந்த ஹோமத்தில் பூர்ணாஹூதிக்கு முன்னதாக யாக வேள்வியிலிருந்து
அம்பாள் அக்னி வடிவாய் எழுந்தருளி அனைவரையும் ஆசீர்வதித்தாள்.
இந்த ஹோமத்தில் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு
மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அனைவரும் நிகும்பல ஹோமத்திலும், அதன்பிறகு நடைபெறும்
மகிசாசூரமர்த்தினி அபிஷேகத்திலும், கலந்து கொண்டு கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.
மேலும் இதனைத் தொடர்ந்து நாளை காலை 10.00 மணியளவில்
(02.06.2013) ஸ்ரீ சரஸ்வதி தேவி, ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மர், ஸ்ரீ ராகு-கேது ஆகிய
தெய்வங்களுக்கு மண்டலாபிஷேகம் பூர்த்தியாக உள்ளது எனவே பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு
பயனடைய வேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.
No comments:
Post a Comment