Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, June 5, 2013

கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமம்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் உலக நலன்கருதி
கார்த்த வீர்யார்ஜூனருக்கு 
சிறப்பு ஹோமம் மற்றும் அபிஷேகம்
தத்தாத்ரேயரின் பிரதான சீடரான கார்த்தவீர்யார்ஜுனர், ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் எண்ணற்ற யாகங்களைச் செய்தவர். ராஜராஜேஸ்வரன் என்ற மன்னர் குலத்தில் வந்தவர்.

இவரை வணங்கினால் பொருள் நஷ்டம் தவிர்க்கப்படும். தவிர, வியாபார நஷ்டத்தில் இருந்து நன்மை பெறவும், களவு போன பொருட்கள் திரும்பக் கிடைக்கவும், காணாமல் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கவும் ஸ்தாபனங்களில் நம்பிக்கையான ஊழியர்களை அமைத்துக் கொடுக்கவும் வல்லவர் இவர்

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அமைந்துள்ள இத்தனை சிறப்புமிக்க தெய்வமான ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனருக்கு 6.6.2013 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் ஹோமமும், இதனைத் தொடர்ந்து ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜூனர் மூலவருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் மற்றும் கூட்டுப் ப்ரார்த்தனையும் நடைபெற உள்ளது.

மேலும் 8.6.2013 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை மஹா நவசண்டி ஹோமம் நடைபெற உள்ளது. இந்த வைபவத்தின் முன்னதாக 7.6.2013 வெள்ளிக்கிழமை மாலை பலி பூஜைகளும், யாகசால பூஜைகளும் நடைபெற உள்ளன.

எனவே மேற்கண்ட அனைத்து வைபவங்களிலும் அதன்பின் நடைபெறும் அன்னதானத்திலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment