ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
நவசண்டி யாகத்திருவிழா
உலக நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்
தலைமையில் 20 சிறந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு, மஹா நவசண்டி ஹோமம் ஜுன் மாதம் 8ம்
தேதி சனிக்கிழமை அமாவாசையை முன்னிட்டும் ஜுன் 16ம் தேதி வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டும்
காலை முதல் மாலை வரை விசேஷமாக நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் 300க்கும் மேற்பட்ட மூலிகைகள், 100 வகையான பழங்கள்,
கடுகு, உப்பு, மிளகு, நாயுருவி, மிளகாய் வற்றல், வெள்ளை பூசணிக்காய், வேப்பெண்ணெய்
போன்ற விசேஷ திரவியங்களும் மற்றும் பலகார வகைகள், பட்சணங்கள், நவரத்தினங்கள், 100க்கும்
மேற்பட்ட பட்டு வஸ்திரங்கள் ஆகியன சமர்ப்பிக்கப்பட உள்ளன. மேலும் பலவகை சித்ரான்னங்களும்
சமர்ப்பிக்கப்பட உள்ளன.
சுமார் 15 அடி ஆழமும் 8 அடி விட்டமும் உள்ள ஹோம குண்டத்தில்
நவசண்டி ஹோமம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பில்லி, சூன்யம், இதர தீய
சக்திகள் அகலவும், எதிர்மறையான எண்ணங்கள் நீங்கவும், மரண பயங்கள் நீங்கவும், கடன்கள்
நீங்கி பொருளாதாரம் பெருகவும், வீடு மனை வாங்கவும், திருமண தோஷங்கள் நீங்கி ஆண், பெண்
திருமணம் நடைபெறவும், புத்திர தோஷம் நீங்கி புத்திர பாக்யம் ஏற்படவும், நீர்நிலை பெருகி
உணவு உற்ப்பத்தி அதிகமாகி விவசாயிகள் மகிழ்ச்சியடையவும், அரசு அதிகாரிகள் உயர்பதவி
பெறவும், வியாபாரம் பெருகவும், சத்ருக்கள் மற்றும் எதிரிகளின் தொல்லைகள் நீங்கவும்,
பித்ரு தோஷம், கோ தோஷம், குரு சாபம் போன்ற பல சாபங்கள் நீங்கவும், திருமண மாங்கல்ய
பாக்யம் நிலைக்கவும் இதுபோன்ற பல காரணங்கள், தேவைகளுக்காகவும் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தை முன்னிட்டு சுமங்கலி பூஜை, கன்யா பூஜை, வடுகு பூஜை,
தம்பதிகள் பூஜை போன்ற பூஜைகளும் நடைபெற உள்ளன.
இந்த ஹோமங்களுக்கும், தேவையான பூஜைகளுக்கும் இதைத் தொடர்ந்து
நடைபெறும் அபிஷேகங்களுக்கும் தேவையான அனைத்துப் பொருட்களும் கொடுத்துதவி அம்பிகையின்
அருளுக்கும், கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்திற்கும் பாத்திரமாகும்படி
கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு : 9443330203
No comments:
Post a Comment