Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, June 3, 2013

சகல தேவதா காயத்ரீ ஹோமம் சிறப்பாக துவங்கியது

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
சகல தேவதா காயத்ரீ ஹோமம் சிறப்பாக துவங்கியது






உலக நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சகல தேவதா ஹோமம் மேளதாளங்களுடன் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசீர்வாதத்துடன் இன்று (03.06.2013) துவங்கியது. சிறந்த வேத விற்பன்னர்களான ஸ்ரீலஸ்ரீ ராஜப்பா சிவம், ஸ்ரீலஸ்ரீ விவேகானந்த சிவம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ ராஜீவ்காந்தி சிவம் ஆகியோர்களால் காலை 10 மணிக்கு பீடத்தில் அமைந்துள்ள அனைத்து தெய்வங்களுக்கும் நைய்வேத்தியம் செய்யப்பட்டது. பின்னர் ஹோமம் தொடங்கப்பட்டது, இந்த ஹோமத்தில் பக்தர்கள் பலர் பங்கு பெற்று ப்ரார்த்தனை செய்தனர்.

மேலும் அனைத்து பீடத்தின் அனைத்து தெய்வங்களுக்கும் சம்ப்ரோக்ஷணம் செய்யப்பட்டு அதன்பின் நடைபெற்ற சிறப்பு அன்னதானத்திலும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.


இதனைத் தொடர்ந்து மறுநாள் (4.6.2013) காலை 10.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு பீடத்தில் அமைந்துள்ள வாஸ்து பகவானுக்கு வாஸ்து ஹோமமும், அபிஷேகமும் நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும் என்று கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment