கயிலை ஞானகுரு
டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்னுடைய பெற்றோர்களை குருவாக ஏற்று குருவினுடைய ஆசிகளுடன்
உலக மக்களின் ஆரோக்யத்தை மனதில் கொண்டு வேலூர் மாவட்டம், வாலஜாபேட்டை, அனந்தலை மதுரா,
கீழ்புதுப்பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி தினசரி யாகங்களை நடத்தி
வருகிறார். மேலும் பலவிதமான சிறப்பு யாகங்களையும், கூட்டு பிரார்த்தனைகளையும் நடத்தி
வருகிறார்.
பீடத்தில் பலவிதமான
தெய்வங்களையும், மகான்களையும், சித்தர்களையும் ப்ரதிஷ்டை செய்து வருடந்தோறும் மகேஸ்வர
பூஜையுடன் குரு பூஜையும் நடத்தி வருகிறார். சமயம், கலை, இலக்கியம், பண்பாடு, வேதங்கள்,
ஆகமங்கள், பாரம்பரியம் போன்றவைகளை மனதில் கொண்டு, அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிகளை செய்து
வருகிறார்.
தன்வந்திரி பீடத்தில்
தனி நபர்களுக்காக அபிஷேகம், அர்ச்சனை, ஆரத்தி நடைபெறுவதில்லை. மேலும் உண்டியல், காணிக்கை,
வாகன பூஜை, துலாபாரம், வருடாந்திர உற்சவங்கள், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல்,
தீ மிதித்தல், அங்க ப்ரதட்சனம் செய்தல், முடி காணிக்கை, தேங்காய் உடைத்தல் போன்ற வழிபாடுகள்
செய்வதில்லை. ‘நோயற்று வாழட்டும் உலகு’ என்ற
தாரக மந்திரத்தை கொண்டு அனைத்து இன மக்களின் நலனுக்காக கூட்டுப் பிரார்த்தனைகள், தியானம்,
யோகா, இயற்கை மருத்துவம், வாழ்வியல் சம்பந்தமான பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
பீடத்தில் அன்னதானமே
பிரதானம் என்ற முறையில் அன்னதானம் ஆடை தானம் மற்றும் கல்வி உதவி, மருத்துவ உதவி, திருமண
உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய உதவிகள், பள்ளி சீருடைகள், முதியோர்களுக்கான
உதவி, ஆதரவற்றோர்களுக்கான உதவி, இயற்கை சீற்றத்தினால் பாதிக்கப்பட்டோர்களுக்கான உதவி,
சாதுக்களுக்கு வஸ்த்திர தானம், யாத்திரிகளுக்கு தங்கும் விடுதி, முதியோர் இல்லம் போன்ற
பல சமுதாய பணிகளை செய்து வருகிறார் நமது ஸ்வாமிகள்.
ஸ்வாமிகளின் ஆசிகளுடன்
சமயம் மற்றும் சமுதாயப் பணியில் தன்வந்திரி குடும்பத்தினர்.
|
No comments:
Post a Comment