வாலாஜாபேட்டைதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்விசாகப்பட்டிணம் ஸ்ரீ ராமானந்த பாரதி ஸ்வாமிகள்,சிறப்பு வழிபாடு, பூஜை.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூலவர் தன்வந்திரி பகவானுக்கு கடந்த நவம்பர்28ம்தேதி ( திங்கள் கிழமை ) முதல் தைலாபிஷேகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தைலாபிஷேகம் வருகிற டிசம்பர் 8ம்தேதி முடிய காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
தைலாபிஷேகம் 3 வது நாளான இன்று விசாகப்பட்டிணம் மௌனானந்த தபோவனம்,ஸ்ரீ சௌபாக்ய புவனேஸ்வரி பீடம் , ஸ்ரீ ராமானந்த பாரதி ஸ்வாமிகள், தன்வந்திரி பீடத்திற்கு வந்து தன்வந்திரி பெருமாளுக்கு தைலாபிஷேகம் செய்து வழிபட்டார்.
பின்னர் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விரைவில் புதியதாக அமைய உள்ள ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலயங்களுக்காக சிறப்பு பூஜை நடத்தி, விரைவில் திறக்கப்பட உள்ள ஸ்ரீ கருட கங்கா தீர்த்தக்குளத்தையும் பார்வையிட்டு ஆசிர்வசித்தார். பின்னர் 2023ம் ஆண்டிற்கான தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் காலண்டரையும் வெளியிட்டார்.
முன்னதாக அவருக்கு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தைலாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் தன்வந்திரி பகவானை தரிசனம்
செய்து, அபிஷேக நல்லெண்ணெய்யை பிரசாதமாக பெற்று சென்றனர்.
ஆயுள், ஆரோக்யம், சகல ரோக நிவாரணம் வேண்டி அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் இந்த தைலாபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வழங்கி பக்தர்களும் பங்கேற்கலாம் என பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment