வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 101 நாட்கள் நடைபெறும் முப்பெரும் யாகம். ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ சரபேஸ்வரர் ஹோமங்கள் சிறப்பு அபிஷேகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐப்பசி 25 ( நவம்பர்11ம்தேதி) முதல் வருகிற மாசி 7 ( பிப்ரவரி 19ம்தேதி ) முடிய தொடர்ந்து 101 நாட்கள் காலை, மாலையில் நடைபெற உள்ள முப்பெரும் யாகங்கள் கடந்த 11ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய 3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது.
மூன்றாவது நாளாக இன்றும் 13ம்தேதி ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீதன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
மேலும் இன்று குழந்தை பாக்யம் பெற வேண்டி நடைபெறும் சந்தான கோபால யாகம், எதிரிகள் தொல்லை நீங்கிட வேண்டி நடைபெறும் சத்ரு சம்ஹார ஹோமம் ஆகியவையும்நடைபெற்றது.
பீடத்தில் கார்த்திகை பெண்களுடன் உள்ள ஸ்ரீ கார்த்திகைக்குமரனுக்கு சிறப்பு அபிஷேகம் , பூஜை நடைபெற்றது.
மாலை ராகு கால நேரத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஹோமமும், சரபேஸ்வரருக்கு பால், பன்னீர், திரவிய பொடி, மஞ்சள், சந்தனம் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும் , பூஜையும் நடைபெற்றது.
அபிஷேகம் மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி ஸ்ரீ சரபேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment