வாலாஜாபேட்டைஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டுஅஷ்டகால மகா பைரவருக்கு 1008 கிலோ விபூதி அபிஷேகம்64 பைரவர் ஹோமங்கள். சிறப்பு பூஜைகள் புரோகிதர்கள் நலன் கருதி 12 வது ஆண்டு சிறப்பு யாகம் தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தினர் பங்கேற்பு
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும் சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் சேர்ந்து ஒரே கல்லில் ஸ்ரீஅஷ்ட கால மகா பைரவருக்கும், சொர்ணாகர்ஷண பைரவருக்கும் தனி சன்னதி என தன்வந்திரி பீடத்தில் மட்டும் மொத்தம் 10 பைரவர்கள் தனி சன்னதியில் பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்புரிந்து வருகின்றனர்.
தன்வந்திரி பீடத்தில் அஷ்டமி தோறும் பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.
இன்று நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி மற்றும் கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு 64 பைரவர்களுக்கான ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு 1008 கிலோ விபூதியால் சிறப்பு அபிஷேகமும் , வடை மாலை சாற்றி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு , மகா தீபாராதனை நடைபெற்றது.
சொர்ணாகர்ஷண பைரவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
பைரவர்1008 கிலோ விபூதி அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்து மனமுருக பைரவரை வழிபட்டு சென்றனர்.
மேலும் அகில உலக புரோகிதர்கள் மற்றும் புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி12 வது ஆண்டாக சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது. இதில் தென் இந்திய புரோகிதர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாலை லட்சஜப பத்ரகாளி யாகம் தொடங்கியது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment