வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் பூமி பூஜை வாஸ்து நாள் முன்னிட்டு வாஸ்து பகவானுக்குஹோமம், அபிஷேகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஷன்மதத்திற்குரிய தெய்வங்களுக்கும் என மொத்தம் 89 திருச்சன்னதிகள் அமையபெற்றுள்ளது.
இந்த நிலையில் புதியதாக ஸ்ரீ வீரபத்திரர் ஆலயமும் அமைய உள்ளது. இதற்காக 5 அடி உயரத்தில் மாமல்லபுரத்தில் ஸ்ரீ வீரபத்திரர் விக்ரஹம் தயாராகி வருகிறது.
ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி வாஸ்து நாளான இன்று 24ம்தேதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பூமி பூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு புனித கலசங்களில் நீர் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் வாஸ்து நாள் முன்னிட்டு உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர் வாஸ்து பகவானுக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர் , திரவிய பொடி ஆகியவை கொண்டு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.
இன்றும்14 வது நாளாக ஸ்ரீசுதர்சன, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ மகாலஷ்மி யாகங்களும் சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
ஹோமங்கள்,பூஜைகள், அபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமிகளை தரிசனம் செய்து பிரசாதங்கள் பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment