வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷம்,11 வது நாளில் முப்பெரும் யாகங்கள்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, கடந்த 11ம்தேதி அன்று 101 நாட்கள்- முப்பெரும் யாகங்கள் என்ற பெயரில் தொடங்கிய ஸ்ரீசுதர்சன, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ மகாலஷ்மி யாகங்கள் தொடர்ந்து 11 வது நாளாக இன்றும்( 21ம்தேதி) சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
இதன்படி ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய 3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது.
மேலும் இன்று கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு பீடத்தில் கார்த்திகை பெண்களுடன் கூடிய கார்த்திகைகுமரனுக்கும், சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
ஹோமங்கள், பிரதோஷ பூஜைகள், அபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவலிங்க ரூப சித்தர்களை மனமுருக வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment