வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம்,குருநானக் ஜெயந்தி விழா
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, இன்று 8.11.2022 செவ்வாய்கிழமை ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் வடிவமைக்கப்பட்டு அமைந்துள்ள ஸ்ரீ ராகு கேதுவிற்கு பௌர்ணமி தோறும் அன்னதோஷங்கள் விலகவும், அன்னம் குறைவின்றி கிடைக்கவும்,ராகு கேது தோஷங்கள் விலகிடவும், அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீ ராகு கேதுவிற்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் , பக்தர்களுக்கு உணவு குழாயில் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும், தோஷங்கள் விலகவும் அன்னபிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அன்னாபிஷேகத்தில் அன்னம், பருப்பு, வேகவைத்த காய்கறிகள், பொங்கல், வடை, பாயசம், வெண்பொங்கல், புளியோதரை ஆகியவை வைத்து அலங்காரம் செய்து , பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
மேலும் பௌர்ணமியை முன்னிட்டு திருமணத்தடைகள் நீங்கிட கந்தர்வராஜஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோம், நட்சத்திர தோஷங்கள் நீங்கிட பௌர்ணமி யாகம் ஆகியவையும், கிரஹண பூர்த்தி செய்து சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
முன்னதாக மஹான் குருநானக்கின் 553 வது ஜெயந்தியை முன்னிட்டு பீடத்தில் உள்ள குருநானக்கிற்கு சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெற்றது. பின்னர் குருதட்சிணாமூர்த்தி, வள்ளலார், மகா பெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர்,சாய்பாபா ஆகிய குருமார்கள் சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பூஜைகளில் வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
அன்னாபிஷேகம் மற்றும் ஹோமங்கள், பூஜைகளில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment