Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, November 9, 2022

Kiragana shanthi Poojai at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்கிரகண சாந்தி பூஜைகள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று 9.11.2022 புதன்கிழமை காலை கிரகண சாந்தி பூஜைகள் நடைபெற்றது.

சைவம், வைணவம், சாக்தம்,சௌரம், கௌமாரம் ,காணாபத்யம் ஆகிய 6 மதங்களுக்கும் உரிய  90 கடவுள்கள் அமைந்து ஷன்மத பீடமாக விளங்கும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  நேற்று 8ம் தேதிமதியம் சந்திர கிரகணத்தை  முன்னிட்டு கோவில் நடை சாத்தப்பட்டது.

இதை தொடர்ந்து இன்று 9ம்தேதி  காலை  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சன்னதி உள்பட  அனைத்து சன்னதிகளிலும் கிரகண சாந்தி பூஜைகள் செய்யப்பட்டு   பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

 அதனை தொடர்ந்து ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயார் சன்னதியில் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.




இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment