வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தாய் முகாம்பிகை ஆலய பூமி பூஜை விழா, இலவச பகவத் கீதை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என ஷண்மதத்திற்குரிய தெய்வங்களுக்கும் என மொத்தம் 89 திருச்சன்னதிகள் அமையபெற்று, தினந்தோறும் பல்வேறு வகையான யாகங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதியதாக ஸ்ரீ தாய் மூகாம்பிகைக்கும் ஆலயமும் அமைய உள்ளது.
ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலயம் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று டிசம்பர் 2ம்தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பூமி பூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு புனித கலசங்களில் நீர் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
நாளை டிசம்பர் 3ம்தேதி சனிக்கிழமை கார்த்திகை மாத ஏகாதசி , கார்த்திகை மாத ஏகாதசி நாளில் தான் குருசேத்திரத்தில் கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு கீதையை உரைத்தார். எனவே கீதா ஜெயந்தியும் இந்த நாளில் கொண்டாடப்படுகிறது.
நாளை ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு. பக்தர்களுக்கு பகவத் கீதை புத்தகம் இலவசமாக வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment