Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, November 15, 2022

1008 Kg Bairavar viboothi Abishegam, Pathrakali Yagam on16.11.2022 at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  நாளை கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டுஅஷ்டகால மகா பைரவருக்கு 1008 கிலோ விபூதி அபிஷேகம்64 பைரவர் ஹோமங்கள். மாலை  லட்சஜப பத்ரகாளி யாகம்நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர், குரோதண பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷ்ண பைரவர் மற்றும்  சம்ஹார பைரவர் என அஷ்ட பைரவர்களும் சேர்ந்து ஒரே கல்லில்  ஸ்ரீஅஷ்ட கால  மகா பைரவருக்கும், சொர்ணாகர்ஷண பைரவருக்கும் தனி சன்னதி என  தன்வந்திரி   பீடத்தில் மட்டும் மொத்தம் 10 பைரவர்கள் தனி சன்னதியில்  பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்து அருள்புரிந்து வருகின்றனர்.

 தன்வந்திரி பீடத்தில் அஷ்டமி தோறும் பைரவர்களுக்கு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்   நாளை ஐப்பசி 30ம்தேதி, நவம்பர் 16ம்தேதி புதன்கிழமை தேய்பிறை அஷ்டமி  மற்றும் கால பைரவர்  ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்டகால மகா பைரவருக்கு  1008 கிலோ விபூதி அபிஷேகமும், 64 பைரவர் ஹோமங்கள், மகா கணபதி ஹோமம்  ஆகியவையும் காலை முதல் மாலை வரை  நடைபெறுகிறது.

இதற்கான  பூர்வாங்க பூஜைகள்  நேற்று  14ம்தேதி திங்கள் கிழமை  ஹோமங்களுடன் தொடங்கியது, இன்று 15ம்தேதி இரண்டாம் கால  பூஜைகள் நடைபெற்றது.

மேலும் நாளை  16ம்தேதி  அகில உலக புரோகிதர்கள் மற்றும்  புரோகிதர்களின் குடும்ப நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யாகமும் நடைபெறுகிறது.

நாளை  மாலை லட்சஜப பத்ரகாளி யாகம் தொடங்கி  நடைபெறுகிறது.






 இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment