வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர், ஸ்ரீஅஷ்ட நாக கருடர், ஸ்ரீ தன்வந்திரி ஹோமங்கள்21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கருடருக்கு சிறப்பு அபிஷேகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, இன்று 6.11.2022 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி,ஸ்ரீ அஷ்ட நாக கருடர், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமங்கள் நடைபெற்றது.
முன்னதாக ரேவதி நட்சத்திர தினத்தை முன்னிட்டு 21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடருக்கும், ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமத்துடன் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கும் பால், திரவிய பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், பூஜைகளும் நடைபெற்றது.
ஸ்ரீ தன்வந்திரி ஹோமத்தை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும், ஸ்ரீ வினாயகர் தன்வந்திரிக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
ராகுகால சரபேஸ்வரர் அபிஷேகம், பூஜை
மாலை ராகுகாலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது. பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட்டனர்.
ஹோமங்கள், பூஜைகளில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment