Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Thursday, November 3, 2022

ippasi Yegathasi special Poojai on 4.11.2022 at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஐப்பசி மாத  ஏகாதசி முன்னிட்டு                         ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனையும்  நிறைவு  பெறுகிறது

 வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  கடந்த மாதம்27ம் தேதி முதல் உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள்  நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல  அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் 10 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது.

ஐஸ்வர்யங்கள் பெருகச்செய்யும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் நாளை  4.11.2022ம்தேதி வெள்ளிக்கிழமை  வரும்‘பாபாங்குசா’ ஏகாதசி என அழைக்கப்படும் ஐப்பசி மாத
 ஏகாதசி முன்னிட்டு   மூலவர்   தன்வந்திரி பெருமாளுக்கு,  நெல்லிப்பொடி அபிஷேகமும், சிறப்பு புஷ்ப  அலங்காரம் செய்யப்பட்டு  பூஜைகள் நடைபெறுகிறது.

மேலும் கடந்த மாதம் 27ம் தேதி  தொடங்கி நடைபெற்று வந்த  லட்சார்ச்சனையும்  சிறப்பு ஹோமங்கள் , பூஜைகளுடன் நிறைவு பெறுகிறது,இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.


No comments:

Post a Comment