Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Sunday, November 20, 2022

81 Kalasa ThiruManjanam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                        103 வயது  நம்பூதிரி தலைமையில் 2 நாட்களாக நடைபெற்ற                               லட்ச ஜப மஹா தன்வந்திரி ஹோமம்,                                                                                      81 கலச திருமஞ்சனம் நிறைவு 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,   லட்ச ஜப மஹா தன்வந்திரி ஹோமம் மற்றும் மூலவர் தன்வந்திரி  பகவானுக்கு 81 கலச திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது.

 நேற்று 19ம்தேதி சனிக்கிழமை அன்று  காலை கணபதி  பூஜை , ஹோமத்துடன் தொடங்கிய இந்த  லட்ச ஜப மஹா தன்வந்திரி ஹோமம்  பூஜைகள் 2 நாட்கள் நடைபெற்றது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், பாலா பகுதியை சேர்ந்த 103 வயதுடைய  விஷ்ணு நம்பூதிரி தலைமையில், ஹரிகிருஷ்ணன் நம்பூதிரி குழுவினர் 2 நாட்களாக  பல்வேறு சிறப்பு பூஜைகளுடன்  மஹா தன்வந்திரி  ஜெபம் செய்து யாகத்தை நடத்தினர். 

பின்னர் 81 கலசங்களில் தீர்த்தம் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.  இன்று 20ம்தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட  81 கலசங்களில் வைக்கப்பட்டிருந்த தீர்த்தத்தை கொண்டு மூலவருக்கு சிறப்பு  திருமஞ்சனமும், பூஜைகளும் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டது. 

மாலையில் ராகு கால நேரத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு சிறப்பு ஹோமமும், பால்,சந்தனம், பன்னீர் ,மஞ்சள், திரவியப்பொடி ஆகியவை கொண்டு  அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.  

பூஜைகள் மற்றும் 81 கலச திருமஞ்சன நிகழ்ச்சிகளில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

 பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  பிரசாதமும் , ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  








No comments:

Post a Comment