வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 103 வயது நம்பூதிரி தலைமையில் நடைபெற்ற லட்ச ஜப பத்ரகாளி யாகம் நிறைவு 3 நாட்களாக நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, கடந்த 16ம்தேதி புதன்கிழமை அன்று மாலை லட்ச ஜப பத்ரகாளி யாகம் தொடங்கியது.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், பாலா பகுதியை சேர்ந்த 103 வயதுடைய விஷ்ணு நம்பூதிரி தலைமையில், ஹரிகிருஷ்ணன் நம்பூதிரி குழுவினர் 3 நாட்களாக பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் 1லட்சத்து 700 முறை பத்ரகாளி ஜெபம் செய்து யாகத்தை நடத்தினர்.
பத்ரகாளி யாகத்தை முன்னிட்டு கேரள குருதி பூஜையும், பத்ரகாளிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
3 நாட்கள் நடைபெற்ற இந்த லட்ச ஜப பத்ரகாளி யாகம் இன்று 18ம்தேதி சிறப்பு பூஜைகளுடன் நிறைவு பெற்றது.
இதை தொடர்ந்து மாலையில் லட்ச ஜப மஹா தன்வந்திரி யாகம் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த யாகத்தை தொடர்ந்து மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு 81 கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு ஹோமங்கள், பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment