வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி முன்னிட்டு ருத்ர ஹோமம்,ஸ்ரீ மரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, இன்று 7.11.2022 திங்கள்கிழமை ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு ருத்ர ஹோமம் நடைபெற்றது.
மேலும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, பூஜைகளுடன் அன்னாபிஷேகமும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அன்னாபிஷேகத்தில் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
நாளை 8.11.2022 செவ்வாய்க்கிழமை காலை பௌர்ணமியை முன்னிட்டு திருமணத்தடைகள் நீக்கும் கந்தர்வராஜ ஹோமம், சுயம்வர கலா பார்வதி ஹோமம், குழந்தை பாக்யம் வேண்டி சந்தான கோபால யாகம், ராகு கேது தோஷங்கள் நீங்கிட ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
---
No comments:
Post a Comment