Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Monday, November 28, 2022

Thailabishegam (28.11.2022 to 8.12.2022) at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மூலவர்  தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம்டிசம்பர் 8ம்தேதி வரை நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூலவர்  தன்வந்திரி பகவானுக்கு இன்று  நவம்பர்28ம்தேதி ( திங்கள் கிழமை )  முதல் தைலாபிஷேகம் தொடங்கியது

தைலாபிஷேகம் தொடக்கத்தை முன்னிட்டு இன்று  கோபூஜை, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சகலதேவதா ஹோமம் ஆகிய ஹோமங்களும், ஸ்ரீ வினாயகர் தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி வினாயகர்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

தைலாபிஷேகத்தை  வாலாஜா  தொழிலதிபர்.மகேந்திர வர்மன்,  வாலாஜா நகரசபை துணைத்தலைவர்  கமலராகவன் ஆகியோர் தொடங்கி வைத்து சாமிதரிசனம் செய்தனர். 

ஆயுள், ஆரோக்யம், சகல ரோக நிவாரணம் வேண்டி  அபிஷேகம் செய்யப்படும்  நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் இந்த தைலாபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வழங்கி பக்தர்களும் பங்கேற்கலாம்.

இன்று 28ம்தேதி தொடங்கிய இந்த தைலாபிஷேகம்  வருகிற டிசம்பர் 8ம்தேதி முடிய தினமும் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. 

மேலும் மாலையில் பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமும், பால்,  மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவிய பொடி ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. 

தைலாபிஷேகம், ஹோமங்கள்,பூஜைகள்,அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  மூலவர் தன்வந்திரி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகளையும்   தரிசனம் செய்து  பிரசாதங்கள் பெற்று சென்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  








No comments:

Post a Comment