வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஐப்பசி மாத ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் லட்சார்ச்சனையும் நிறைவு பெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, கடந்த மாதம்27ம் தேதி முதல் உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள் நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்று வந்தது.
ஐஸ்வர்யங்கள் பெருகச்செய்யும் ஐப்பசி மாதம் வளர்பிறையில் இன்று 4.11.2022ம்தேதி வெள்ளிக்கிழமை ‘பாபாங்குசா’ ஏகாதசி என அழைக்கப்படும் ஐப்பசி மாத ஏகாதசி முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு, நெல்லிப்பொடி மற்றும் பால்,மஞ்சள், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், மூலவருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
மேலும் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த லட்சார்ச்சனையும் சிறப்புபூஜைகளுடன் நிறைவு பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment