வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மூலவர் தன்வந்திரி பகவானுக்கு 2 வது நாளாக தைலாபிஷேகம்கூஷ்மாண்ட யாகமும் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூலவர் தன்வந்திரி பகவானுக்கு நேற்று நவம்பர்28ம்தேதி ( திங்கள் கிழமை ) முதல் தைலாபிஷேகம் தொடங்கியது. இந்த தைலாபிஷேகம் வருகிற டிசம்பர் 8ம்தேதி முடிய காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
ஆயுள், ஆரோக்யம், சகல ரோக நிவாரணம் வேண்டி அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் இந்த தைலாபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வழங்கி பக்தர்களும் பங்கேற்கலாம்.
2 வது நாளாக இன்றும் நவம்பர்29ம்தேதி , மூலவர் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகளுடன் தைலாபிஷேகம்நடைபெற்றது.
மேலும் இன்று , குடும்ப நலன் கருதி பூசணிக்காய்கள் கொண்டு கூஷ்மாண்ட யாகம் நடைபெற்றது.
ஹோமங்கள், பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் தன்வந்திரி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment