வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் , அபிஷேக பூஜைகள்
குபேரபுரி, அழகாபுரி, ஆரோக்யபுரி, ஐஸ்வர்யபுரி என பல்வேறு பெயர்களில் பக்தர்களால் அழைக்கப்படும் வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, 5 அடி உயரத்தில் பத்மநிதி, சங்கநிதியுடன் ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.
தீபாவளி பண்டி¬கையை முன்னிட்டு இன்று 24ம்தேதி திங்கள் கிழமை , உலக மக்கள் அனைவரும் ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்யமுடன், ஆனந்தமாக வாழ ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு சிறப்பு அபிஷேகங்களும், பலவித வண்ண மலர்களால் விசேஷ அர்ச்சனை, தீப சேவை ஆகியவையும் நடைபெற்றது. யாகம் மற்றும் அபிஷேகத்தில் பங்கேற்று வ-ழிபட்ட பக்தர்களுக்கு பிரசாதமும், குபேர ரட்சை, டாலர், குங்குமம் ஆகியவை வழங்கப்பட்டன.
நாளை 25ம்தேதி செவ்வாய்க்கிழமை அமாவாசை முன்னிட்டு ஸ்ரீ சரப சூலினி ப்ரத்யங்கிரா தேவி யாகமும் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.
தீபாவளி பண்டிகையை ஒட்டி ஸ்வாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment