வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்சத்ரு சம்ஹார ஹோமம் , சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனை
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, உலக மக்கள் உடல், மன ரீதியான நோய்கள் நீங்கி நல் வாழ்வு பெறவும், ஸ்தல அபிவிருத்தி மற்றும் மூர்த்தி ஸ்தானத்திற்காகவும் 10 நாட்கள் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
கடந்த 27ம்தேதி தொடங்கிய இந்த லட்சார்ச்சனை வருகிற நவம்பர் 5ம்தேதி சனிக்கிழமை முடிய நடைபெறுகிறது.
3 வது நாளான இன்று சனிக்கிழமை மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயார் சமேத மூலவர் தன்வந்திரி பெருமாள், உற்சவர் தன்வந்திரி ஆகியோருக்கு சிறப்பு பூஜைகளுடன் லட்சார்ச்சனை நடைபெற்றது.
கந்த சஷ்டியை முன்னிட்டு 5 வது நாளாக இன்று சத்ரு சம்ஹார ஹோமமும், வேறு எங்கும் இல்லாத வகையில் தன்வந்திரி பீடத்தில், கார்த்திகைபெண்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ கார்த்திகைக்குமரனான முருகபெருமாளுக்கு சிறப்பு கலசஅபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
மேலும் சனிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரர் ,ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் ஆகிய ஸ்வாமிகளுக்கும் சிறப்பு ஹோமங்களும், அபிஷேகங்களும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தெய்வங்களை மனமுருகி வணங்கி வழிபட்டு சென்றனர்.
பக்தர்களுக்கு பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment