புரட்டாசி ஞாயிறு முன்னிட்டுமூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள். நாளை சர்ப்பயாகத்துடன் சர்ப்பபலி, நாராயணபலி பூஜைகள்
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, இன்று 16ம் தேதி புரட்டாசி ஞாயிற்றுக்கிழமை முன்னிட்டு, ஆயுள், ஆரோக்யம் வேண்டி மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.மாலையில் ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் ஹோமம் மற்றும் அபிஷேக பூஜை நடைபெற்று,தீபங்கள் ஏற்றப்பட்டது.
சிறப்பு பூஜையில் உலக நலன் மற்றும் ஆயுள், ஆரோக்யம் வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது. பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை 17ம்தேதி திங்கள்கிழமை சர்ப்ப யாகத்துடன் நாராயண பலி, சர்ப்ப பலி பூஜைகள் வரை நடைபெறுகிறது.
இந்த யாகம் மற்றும் பலி பூஜைகளில் பாம்பு தோஷம், சர்ப்ப தோஷம் நீங்கிடவும், நட்சத்திர தோஷம், கால சர்ப்ப தோஷங்கள், சர்ப்ப கோபங்கள் நீங்கிடவும் பிரார்த்தனை செய்யப்பட உள்ளது.
யாகம்,பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு மேற்கண்ட தோஷங்கள் நீங்கிட தெய்வங்களை வணங்கி பிரார்த்தனை செய்து கொள்ளலாம் .
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment