வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா தொடக்கம் தன்வந்திரி பெருமாளுக்கு 108 கலசாபிஷேகம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா 21ம்தேதி தொடங்கி வருகிற 24ம்தேதி முடிய 4 நாட்கள் நடைபெறுகிறது.
தான்தராஸ் எனப்படும் தன்வந்திரி ஜெயந்தியைமுன்னிட்டு இன்று 22ம்தேதி சனிக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி ஹோமமும், மூலவர் தன்வந்திரி பகவானுக்கு 108 கலசங்களில் மூலிகைகள் கொண்டு மகா திருமஞ்சனம் நடைபெற்றது.
சனிசாந்தி ஹோமமும், ஸ்ரீ ஜெயமங்கள சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பாதாள சொர்ண( தங்க ) சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜையும், சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரர், 468 சிவலிங்க ரூப சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேக பூஜையும் நடைபெற்றது.
மருத்துவகடவுளும், ஆயுர்வேதத்தின் தந்தையும், காக்கும் கடவுளுமான ஸ்ரீதன்வந்திரி பகவான் ஜெயந்தி முன்னிட்டு 23ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி மஹா மந்திர ஜபமும், 500 கிலோ பூக்கள் கொண்டு புஷ்ப யாகமும் , சிறப்பு ஆராதனையும், தீபாவளி பண்டிகை முன்னிட்டு தன்வந்திரி லேகியம் தயார் செய்தலும் நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற 108 கலச திருமஞ்சன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகளால் கலசங்களை ஸ்வாமி அபிஷேகத்திற்கு எடுத்து வழங்கி ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி டாக்டர்.முரளிதரஸ்வாமிகளிடம் பிரசாதமும், ஆசியும் பெற்று சென்றனர்.
24ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment