வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 7ம் நாள் விழா ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கிக்கு ஹோமம்சிறப்பு அபிஷேகம், பூஜைகள்.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நவராத்திரி விழா 10 நாட்கள்-16 ஹோமங்கள் என்ற வகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவராத்தியில் 7ம் நாளான இன்று அக்டோபர் 2ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கி அம்மனுக்கு ஹோமமும் சிறப்பு அபிஷேகம் ,ஆராதனை நடைபெற்றது .
கல்வி, கேள்வி, பக்தி, வைராக்கியம் போன்ற 64 விதமான கலைகளுக்கு அதிபதியான சரஸ்வதிக்கும், பிரம்மாவிற்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேலும் ஒரு சிறப்பாக ராஜயோகத்தையும், அரசு பதவிகளில் வெற்றியையும் , தேர்வுகளில் அதிக மதிப்பெண்களையும் பெற ஆசிர்வதித்து, அருள் வழங்கும் ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜ மாதங்கிக்கும் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீஅஷ்டபுஜ மரகத ராஜமாதங்கியை தமி-ழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபட்டு பயனடைந்து வருகின்றனர்.
தேவி ஸ்ரீ அஷ்டபுஜ மரகத ராஜமாதங்கியின் அருள் வேண்டி ஹோமத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது.
ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நவராத்திரியில் 8ம் நாளான நாளை 3ம்தேதி ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி ஹோமம் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment