வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 6 பூஜைகள். நவராத்திரி 10ம் நாள் ஹோமம், அபிஷேகம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நவராத்திரி விழா 10 நாட்கள்-16 ஹோமங்கள் என்ற வகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று அக்டோபர் 5ம்தேதி செவ்வாய்க்கிழமை, ஸ்ரீ வள்ளலார் அவதார தினம்,ஸ்ரீ சாய்பாபா சமாதி தின சிறப்பு பூஜைகளும், ஸ்ரீ சுதர்சன ஹோமத்தை ஒட்டி சுதர்சன ஆழ்வாருக்கு சிறப்பு பூஜை, கல்விக்கடவுள் ஸ்ரீ வாணி சரஸ்வதி தேவிக்கு வித்யாரம்ப பூஜைகள், ஸ்ரீமகிஷா சுர மர்த்தினிக்கு சிறப்பு பூஜை மற்றும் நவராத்திரி 10ம் நாளை ஒட்டி ஸ்ரீ மரகதேஸ்வரர் சமேத மரகதாம்பிகைக்கு சிறப்பு ஹோமம் , அபிஷேகம், பூஜை ஆகியவை நடைபெற்றது.ஹோமம் மற்றும் பூஜைகளில் உலக நலன் வேண்டியும், பக்தர்கள் வாழ்வில் தடைகள் தகர்ந்து அனைத்து வளங்களை பெறவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
வித்யாரம்பம் பூஜைகளில் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சரஸ்வதி தேவியின் கடாட்சம் கிடைத்து கல்வியில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்தனர்.
ஹோமம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெற்ற ஆயுத பூஜையில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment