வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா தொடக்கம் ஸ்ரீ ஆரோக்யலஷ்மிக்கு சிறப்பு அபிஷேகம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா இன்று 21ம்தேதி தொடங்கி வருகிற 24ம்தேதி முடிய 4 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவில் இன்று 21ம் தேதி வெள்ளிக்கிழமை , தன்வந்திரி ஜெயந்தி விழா தொடக்கம் மற்றும் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டும் கோ பூஜை, ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ சுதர்சன ஹோமம், ஸ்ரீலஷ்மி ஹோமம் ஸ்ரீ ஆரோக்ய லஷ்மிக்கு நவ கலச திருமஞ்சனம், சிறப்பு அபிஷேகம், ஸ்ரீ வினாயகர் தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி வினாயகருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பிரசாதமும், ஆசியும் பெற்று சென்றனர்.
விழாவில் நாளை 22ம் தேதி சனிக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 108 கலச தீர்த்த திருமஞ்சனமும், 23ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி மஹா மந்திர ஜபமும், புஷ்ப யாகமும் நடைபெறுகிறது.
வருகிற 24ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment