வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி 8ம் நாள் விழா ஸ்ரீ பாலாதிரிபுர சுந்தரிக்கு ஹோமம்சிறப்பு அபிஷேகம், பூஜைகள்.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நவராத்திரி விழா 10 நாட்கள்-16 ஹோமங்கள் என்ற வகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவராத்தியில் 8ம் நாளான இன்று அக்டோபர் 3ம்தேதி திங்கள்கிழமை, ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மனுக்கு ஹோமம், சிறப்பு அபிஷேகம்,ஆராதனை, குங்கும அர்ச்சனை ஆகியவை நடைபெற்றது
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், 1008 பெண்கள் பங்கேற்று நடைபெற்ற சுமங்கலி பூஜை அதை தொடர்ந்து 27க்கும் மேற்பட்ட சாக்த உபாசகர்களால் நவாபர்ண பூஜை , ஸ்ரீ லலிதா ஹோமம்3 நாட்கள் நடைபெற்று பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டது ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் விக்ரஹம்.
ஹோமம் மற்றும் அபிஷேகம், பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல்வேறு விதமான திருப்பங்களை தரும் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரி அம்மனை வழிபட்டு பிரசாதங்கள் பெற்று சென்றனர். பின்னர் அன்னதானம் நடைபெற்றது.
பின்னர் அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ அஷ்ட பைரவர்களுடன் கூடிய மகா கால பைரவர், ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் என மொத்தம் 10 பைரவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நவராத்திரியில் 9ம் நாளான நாளை 4ம்தேதி ஸ்ரீ வாணி சரஸ்வதி, ஸ்ரீ வாக்தேவி சமேத சதுர்முக பிரம்மா ஆகிய தெய்வங்களுக்கு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment