வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் புரட்டாசி 3ம் சனிக்கிழமை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பகவானுக்கு அபிஷேகம், அன்னப்படையல். நாளை பௌர்ணமி சிறப்பு ஹோமங்கள், பூஜைகள்
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நோய்கள் தீர்த்து காக்கும் மருத்துவக்கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் 9 அடி உயரத்தில் , பத்ம பீடத்தில், கையில் சங்கு, சக்கரம், அமிர்த கலசம், சீந்தல் கொடி ஏந்தியவாறு, நின்ற நிலையில், மருத்துவர் கோலத்தில் 46 லட்சம் பக்தர்கள் எழுதிய 54 கோடி மந்திரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். இது தவிர சைவம், வைணவம், ஸ்ரீசாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம் என 6 மதங்களுக்குரிய தெய்வங்களும் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினந்தோறும் ஹோமங்கள் , பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று 8ம்தேதி புரட்டாசி மாத 3ம் சனிக்கிழமையை ஒட்டி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கு பஞ்ச திரவிய அபிஷேகம்,விசேஷ அலங்காரம், அன்னபடையல் வைபவம், புஷ்பாஞ்சலி, தீபசேவை, மாவிளக்கு பூஜைஆகியவை நடைபெற்றது.
இந்த அபிஷேகம் மற்றும் பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று சகலவிதமான தோஷங்கள், உடல் பிணி, மனப்பிணி நீங்க ஸ்ரீ தன்வந்திரி பகவானை வழிபட்டு சென்றனர்.
பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
பௌர்ணமி சிறப்பு ஹோமங்கள் - நாளை 9ம்தேதி ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், 27 நட்சத்திர தாரர்களுக்கான நட்சத்திர சாந்தி ஹோமம், ராகு , கேது தோஷங்கள் நீங்கிட ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம், முனீஸ்வரர் அனுக்கிரஹம் வேண்டி 12 மணிக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், படையல் ஆகியவையும், மாலை ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடைபெறுகிறது.
ஸ்ரீ லஷ்மி நாராயணர் சுவாமி பிரதிஷ்டை- மேலும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 8 அடி உயரத்தில் சுதை சிற்பமாக ஸ்ரீ லஷ்மி நாராயணர் சுவாமி பிரதிஷ்டை நடைபெறுகிறது. பிரதிஷ்டா வைபவத்தை ஒட்டி சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
No comments:
Post a Comment