புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை, பஞ்சமி முன்னிட்டு ஸ்ரீ வாணி சரஸ்வதி, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமங்கள்,ஸ்ரீபஞ்சமுக வராஹி ஹோமம் , அபிஷேகம் பூஜை
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி,
இன்று 14ம் தேதி வெள்ளிக்கிழமை பஞ்சமி முன்னிட்டு ஸ்ரீ வாணி சரஸ்வதி, ஸ்ரீ வாஸ்து பகவான், ஸ்ரீ லஷ்மி வராஹர் , ஸ்ரீ பஞ்சமுக வராஹி ஆகிய தெய்வங்களுக்கு ஹோமங்கள், சிறப்பு அபிஷேகம் , பூஜை ஆகியவை நடைபெற்றது. மாலையில் ஸ்ரீ பஞ்சமுக வராஹிக்கு வராஹி தீபமும் ஏற்ற்ப்பட்டது.
ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் பூமி சம்பந்தமான தோஷங்கள், சகலவிதமான பாவங்கள் அகல,வாக்கு பலிதம் ஏற்பட, மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க, பூமி சம்பந்தமான தோஷங்கள் அகல, வீடு , மண், மனை பாக்கியங்கள் பெற , பஞ்ச பூதங்கள் மற்றும் அஷ்ட திக் பாலகர்களின் அருள் பெறவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
பூஜைகள், ஹோமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து திருஷ்டிக்காய், திருஷ்டிக்கயிறு, வாஸ்து யந்திரம், எழுது பொருள்கள் ஆகியவற்றை பிரசாதமாக பெற்று சென்றனர்.
பக்தர்களுக்கு பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
நாளை 15ம்தேதி சனிக்கிழமை ஷஷ்டியை முன்னிட்டு சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment