வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா தன்வந்திரி பெருமாளுக்கு 500 கிலோ பூக்களால் மகா புஷ்ப யாகம்
வாலாஜாபேட்டை, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி விழா கடந்த 21ம்தேதி முதல் வருகிற 24ம்தேதி முடிய 4 நாட்கள் நடைபெறுகிறது.
விழாவில் இன்று 23ம்தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி மஹா மந்திர ஜபமும், 500 கிலோ எடையில் பல வண்ண பூக்கள் கொண்டு புஷ்ப யாகமும், 108 நெய் தீபம் ஏற்றி சிறப்பு ஆராதனையும், அன்னதானமும், தீபாவளி பண்டிகை முன்னிட்டு தன்வந்திரி லேகியம் தயார் செய்தலும் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற புஷ்ப யாகத்தில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், புஷ்ப யாகத்திற்கு தங்கள் கைகளாலேயே பூக்களை பெற்று மனமருக தன்வந்திரி பெருமாளை பிரார்த்தனை செய்தனர்.
பக்தர்களுக்கு பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
மாலை ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகமும், சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது.
மாலையில், முன்னோர்கள் முக்தி அடைய வேண்டி எம தீபம் ஏற்றப்பட்டது. நாளை 24ம்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீ லஷ்மி குபேரர் யாகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment