வாலாஜாபேட்டைஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்பௌர்ணமி சிறப்பு ஹோமங்கள், பூஜைகள்
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, இன்று 9ம்தேதி ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம், 27 நட்சத்திர தாரர்களுக்கான நட்சத்திர சாந்தி ஹோமம், ராகு , கேது தோஷங்கள் நீங்கிட ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம், முனீஸ்வரர் அனுக்கிரஹம் வேண்டி சிறப்பு ஹோமம், அபிஷேகம் நடைபெற்று படையல் வைக்கப்பட்டது.
பின்னர் மாலையில் ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரர் யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக பூஜைகளும், சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அன்னதானமும் நடைபெற்றது.
ஸ்ரீ லஷ்மி நாராயணர் சுவாமி பிரதிஷ்டை
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 8 அடி உயரத்தில் சுதை சிற்பமாக
ஸ்ரீ லஷ்மி நாராயணர் சுவாமி பிரதிஷ்டை சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளுடன் நடைபெற்றது.
ஹோமங்கள், பூஜைகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.
இந்த அபிஷேகம் மற்றும் பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று சகலவிதமான தோஷங்கள், உடல் பிணி, மனப்பிணி நீங்க வழிபாடு செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment