Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, November 30, 2022

Visakhapatnam Sri Ramanantha Bharathi Swamigal Visit , Dharisanam and Poojai at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்விசாகப்பட்டிணம்  ஸ்ரீ  ராமானந்த பாரதி  ஸ்வாமிகள்,சிறப்பு வழிபாடு, பூஜை.

 









வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூலவர்  தன்வந்திரி பகவானுக்கு  கடந்த   நவம்பர்28ம்தேதி ( திங்கள் கிழமை )  முதல் தைலாபிஷேகம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தைலாபிஷேகம் வருகிற டிசம்பர் 8ம்தேதி முடிய  காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை  நடைபெறுகிறது.

தைலாபிஷேகம் 3 வது நாளான இன்று   விசாகப்பட்டிணம்  மௌனானந்த தபோவனம்,ஸ்ரீ சௌபாக்ய புவனேஸ்வரி பீடம் , ஸ்ரீ  ராமானந்த பாரதி  ஸ்வாமிகள், தன்வந்திரி  பீடத்திற்கு வந்து தன்வந்திரி பெருமாளுக்கு  தைலாபிஷேகம் செய்து வழிபட்டார்.

பின்னர்  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் விரைவில் புதியதாக அமைய உள்ள ஸ்ரீ வீரபத்திரர், ஸ்ரீ தாய் மூகாம்பிகை ஆலயங்களுக்காக சிறப்பு பூஜை  நடத்தி, விரைவில் திறக்கப்பட உள்ள ஸ்ரீ கருட கங்கா தீர்த்தக்குளத்தையும் பார்வையிட்டு ஆசிர்வசித்தார். பின்னர் 2023ம் ஆண்டிற்கான தன்வந்திரி  ஆரோக்ய பீடத்தின்  காலண்டரையும் வெளியிட்டார்.

முன்னதாக  அவருக்கு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் சார்பில் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தைலாபிஷேகத்தில் ஏராளமான  பக்தர்கள் கலந்து கொண்டு  மூலவர் தன்வந்திரி பகவானை தரிசனம்
செய்து, அபிஷேக நல்லெண்ணெய்யை பிரசாதமாக  பெற்று சென்றனர்.

ஆயுள், ஆரோக்யம், சகல ரோக நிவாரணம் வேண்டி  அபிஷேகம் செய்யப்படும்  நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் இந்த தைலாபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வழங்கி பக்தர்களும் பங்கேற்கலாம்  என பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர். முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  

Tuesday, November 29, 2022

Kushmanda Yagam and 2nd Day Thailabishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மூலவர்  தன்வந்திரி பகவானுக்கு 2  வது நாளாக தைலாபிஷேகம்கூஷ்மாண்ட யாகமும் நடைபெற்றது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூலவர்  தன்வந்திரி பகவானுக்கு  நேற்று   நவம்பர்28ம்தேதி ( திங்கள் கிழமை )  முதல் தைலாபிஷேகம் தொடங்கியது. இந்த தைலாபிஷேகம் வருகிற டிசம்பர் 8ம்தேதி முடிய  காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை  நடைபெறுகிறது.

ஆயுள், ஆரோக்யம், சகல ரோக நிவாரணம் வேண்டி  அபிஷேகம் செய்யப்படும்  நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் இந்த தைலாபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வழங்கி பக்தர்களும் பங்கேற்கலாம்.

2 வது நாளாக இன்றும்  நவம்பர்29ம்தேதி , மூலவர்  தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு  பூஜைகளுடன் தைலாபிஷேகம்நடைபெற்றது. 

மேலும் இன்று  , குடும்ப நலன்  கருதி  பூசணிக்காய்கள் கொண்டு  கூஷ்மாண்ட யாகம் நடைபெற்றது.

ஹோமங்கள், பூஜைகளில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  மூலவர் தன்வந்திரி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகளையும்   தரிசனம் செய்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  






Monday, November 28, 2022

Thailabishegam (28.11.2022 to 8.12.2022) at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மூலவர்  தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகம்டிசம்பர் 8ம்தேதி வரை நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூலவர்  தன்வந்திரி பகவானுக்கு இன்று  நவம்பர்28ம்தேதி ( திங்கள் கிழமை )  முதல் தைலாபிஷேகம் தொடங்கியது

தைலாபிஷேகம் தொடக்கத்தை முன்னிட்டு இன்று  கோபூஜை, கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சகலதேவதா ஹோமம் ஆகிய ஹோமங்களும், ஸ்ரீ வினாயகர் தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி வினாயகர்க்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

தைலாபிஷேகத்தை  வாலாஜா  தொழிலதிபர்.மகேந்திர வர்மன்,  வாலாஜா நகரசபை துணைத்தலைவர்  கமலராகவன் ஆகியோர் தொடங்கி வைத்து சாமிதரிசனம் செய்தனர். 

ஆயுள், ஆரோக்யம், சகல ரோக நிவாரணம் வேண்டி  அபிஷேகம் செய்யப்படும்  நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் இந்த தைலாபிஷேகத்திற்கு நல்லெண்ணெய் வழங்கி பக்தர்களும் பங்கேற்கலாம்.

இன்று 28ம்தேதி தொடங்கிய இந்த தைலாபிஷேகம்  வருகிற டிசம்பர் 8ம்தேதி முடிய தினமும் காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. 

மேலும் மாலையில் பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ பஞ்சமுக வராஹி அம்மனுக்கு சிறப்பு ஹோமும், பால்,  மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவிய பொடி ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜையும் செய்யப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. 

தைலாபிஷேகம், ஹோமங்கள்,பூஜைகள்,அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  மூலவர் தன்வந்திரி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகளையும்   தரிசனம் செய்து  பிரசாதங்கள் பெற்று சென்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  








Friday, November 25, 2022

Sri Arokya Lakshmi Homam Abishegam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டைதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                              ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு ஹோமம், அபிஷேகம், குங்கும அர்ச்சனை 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, கடந்த 11ம்தேதி அன்று   101 நாட்கள்- முப்பெரும் யாகங்கள் என்ற பெயரில்  தொடங்கிய ஸ்ரீசுதர்சன, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ மகாலஷ்மி யாகங்கள்  தொடர்ந்து 15 வது நாளாக இன்றும்(25ம்தேதி) ,சிறப்பு பூஜைகளுடன்  நடைபெற்றது. 

இதன்படி   ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய  3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது. 

முன்னதாக இன்று 25ம்தேதி( வெள்ளிக்கிழமை) ஸ்ரீஆரோக்யலஷ்மி தாயாருக்கு  நடைபெற்று வந்த லட்சார்ச்சனை நிறைவு பெற்றதை ஒட்டி  ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாருக்கு சிறப்பு  ஹோமமும், பால், தயிர்,மஞ்சள், சந்தனம், பன்னீர், திரவியப்பொடி ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், குங்கும அர்ச்சனையும் நடைபெற்றது. 

ஹோமங்கள்,பூஜைகள்,அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு   ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயாரையும், மூலவர் தன்வந்திரி பகவான் மற்றும் பரிவார மூர்த்திகளையும்   தரிசனம் செய்து  பிரசாதங்கள் பெற்று சென்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  









Thursday, November 24, 2022

Vaasthu Day Homam, Abishegam , Veerapathirar Sannathi Boomi Poojai at Srt Danvantri Arokya Peedam








 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                       ஸ்ரீ வீரபத்திரர் ஆலயம் பூமி பூஜை                                                                                             வாஸ்து நாள்  முன்னிட்டு வாஸ்து பகவானுக்குஹோமம், அபிஷேகம்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம்  என ஷன்மதத்திற்குரிய தெய்வங்களுக்கும் என  மொத்தம் 89 திருச்சன்னதிகள் அமையபெற்றுள்ளது.

இந்த நிலையில் புதியதாக ஸ்ரீ வீரபத்திரர் ஆலயமும்  அமைய உள்ளது. இதற்காக 5 அடி உயரத்தில்  மாமல்லபுரத்தில்  ஸ்ரீ வீரபத்திரர் விக்ரஹம் தயாராகி வருகிறது. 

ஸ்ரீ வீரபத்திரர்  ஆலயம் அமைப்பதற்கான பூமி பூஜை  நிகழ்ச்சி  வாஸ்து நாளான இன்று 24ம்தேதி வியாழக்கிழமை  நடைபெற்றது.

 பூமி பூஜையை முன்னிட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு  புனித கலசங்களில் நீர் கொண்டு வரப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. 

மேலும் வாஸ்து நாள் முன்னிட்டு  உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர்  வாஸ்து  பகவானுக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர் , திரவிய பொடி ஆகியவை கொண்டு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.

 இன்றும்14 வது நாளாக ஸ்ரீசுதர்சன, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ மகாலஷ்மி யாகங்களும் சிறப்பு  பூஜைகளுடன் நடைபெற்றது.

ஹோமங்கள்,பூஜைகள், அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமிகளை  தரிசனம் செய்து  பிரசாதங்கள் பெற்று சென்றனர். 

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  


Wednesday, November 23, 2022

Veerapathirar Sannathi Boomi Poojai on 24.11.2022 at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                              ஸ்ரீவீரபத்திரர் ஆலயம் பூமி பூஜை.                                                                                      நாளை 24ம்தேதி நடைபெறுகிறது.

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, சைவம், வைணவம், ஸ்ரீ சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம்  என ஷன்மதத்திற்குரிய தெய்வங்களுக்கும் என  மொத்தம் 89 திருச்சன்னதிகள் அமையபெற்றுள்ளது.

இந்த நிலையில் புதியதாக ஸ்ரீ வீரபத்திரர் ஆலயமும்  அமைய உள்ளது. இதற்காக 5 அடி உயரத்தில்  மாமல்லபுரத்தில்  ஸ்ரீ வீரபத்திரர் விக்ரஹம் தயாராகி வருகிறது. 

ஸ்ரீ வீரபத்திரர்  ஆலயம் அமைப்பதற்கான பூமி பூஜை  நிகழ்ச்சி  வாஸ்து நாளான நாளை 24ம்தேதி வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது.

 இன்று 23ம்தேதி  புதன்கிழமை அமாவாசையை  முன்னிட்டு ஸ்ரீ பிரத்யங்கிதா தேவி யாகம் மற்றும் பூஜையும், மிருத்யுஞ்சய ஹோமம், ஆயுஷ் ஹோமம் ,13 வது நாளாக ஸ்ரீசுதர்சன, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ மகாலஷ்மி யாகங்களும் சிறப்பு  பூஜைகளுடன் நடைபெற்றது.

மேலும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், விபூதி  ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது.

ஹோமங்கள்,பூஜைகள், அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமிகளை  மனமுருக வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  








Tuesday, November 22, 2022

Sri Lakshmi Narasimhar Homam, Abishegam at Sri Danvantri Arokya Peedam


 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் லஷ்மி நரசிம்மர் ஹோமம், அபிஷேகம்12 வது நாளில் முப்பெரும் யாகங்கள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,  இன்று 22ம்தேதி செவ்வாய்க்கிழமை ஸ்வாதி நட்சத்திர தினத்தை ஒட்டி ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஹோமம்  நடைபெற்றது.

 பின்னர் தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ கூர்ம லஷ்மி நரசிம்மருக்கு  பால், சந்தனம், மஞ்சள், பன்னீர், திரவியப்பொடி ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டது.

கடந்த 11ம்தேதி அன்று   101 நாட்கள்& முப்பெரும் யாகங்கள் என்ற பெயரில்  தொடங்கிய ஸ்ரீசுதர்சன, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ மகாலஷ்மி யாகங்கள்  தொடர்ந்து 12 வது நாளாக இன்றும் (22ம்தேதி),சிறப்பு பூஜைகளுடன்  நடைபெற்றது. 

ஹோமங்கள், பிரதோஷ  பூஜைகள், அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  




Karthigai Somavara Pirathosam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷம்,11 வது நாளில் முப்பெரும் யாகங்கள்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, கடந்த 11ம்தேதி அன்று   101 நாட்கள்- முப்பெரும் யாகங்கள் என்ற பெயரில்  தொடங்கிய ஸ்ரீசுதர்சன, ஸ்ரீதன்வந்திரி, ஸ்ரீ மகாலஷ்மி யாகங்கள்  தொடர்ந்து 11 வது நாளாக இன்றும்( 21ம்தேதி) சிறப்பு பூஜைகளுடன்  நடைபெற்றது. 

இதன்படி   ஸ்ரீ மஹா சுதர்சன ஹோமம், ஸ்ரீ மஹா தன்வந்திரி ஹோமம், ஸ்ரீ மஹாலட்சுமி ஹோமம் ஆகிய  3 ஹோமங்களும் தினந்தோறும் என 101 நாட்களும் நடைபெறுகிறது. 

மேலும் இன்று  கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு    பீடத்தில் கார்த்திகை  பெண்களுடன்  கூடிய  கார்த்திகைகுமரனுக்கும்,  சிவலிங்க ரூபத்தில் உள்ள  468 சித்தர்களுக்கும் சிறப்பு  அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. 

ஹோமங்கள், பிரதோஷ  பூஜைகள், அபிஷேகம்  ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சிவலிங்க ரூப சித்தர்களை மனமுருக வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.  







Sunday, November 20, 2022

81 Kalasa ThiruManjanam at Sri Danvantri Arokya Peedam

 வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்                                                        103 வயது  நம்பூதிரி தலைமையில் 2 நாட்களாக நடைபெற்ற                               லட்ச ஜப மஹா தன்வந்திரி ஹோமம்,                                                                                      81 கலச திருமஞ்சனம் நிறைவு 

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி,   லட்ச ஜப மஹா தன்வந்திரி ஹோமம் மற்றும் மூலவர் தன்வந்திரி  பகவானுக்கு 81 கலச திருமஞ்சனம் ஆகியவை நடைபெற்றது.

 நேற்று 19ம்தேதி சனிக்கிழமை அன்று  காலை கணபதி  பூஜை , ஹோமத்துடன் தொடங்கிய இந்த  லட்ச ஜப மஹா தன்வந்திரி ஹோமம்  பூஜைகள் 2 நாட்கள் நடைபெற்றது.

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், பாலா பகுதியை சேர்ந்த 103 வயதுடைய  விஷ்ணு நம்பூதிரி தலைமையில், ஹரிகிருஷ்ணன் நம்பூதிரி குழுவினர் 2 நாட்களாக  பல்வேறு சிறப்பு பூஜைகளுடன்  மஹா தன்வந்திரி  ஜெபம் செய்து யாகத்தை நடத்தினர். 

பின்னர் 81 கலசங்களில் தீர்த்தம் வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தினர்.  இன்று 20ம்தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட  81 கலசங்களில் வைக்கப்பட்டிருந்த தீர்த்தத்தை கொண்டு மூலவருக்கு சிறப்பு  திருமஞ்சனமும், பூஜைகளும் நடைபெற்று, அலங்காரம் செய்யப்பட்டது. 

மாலையில் ராகு கால நேரத்தில் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு சிறப்பு ஹோமமும், பால்,சந்தனம், பன்னீர் ,மஞ்சள், திரவியப்பொடி ஆகியவை கொண்டு  அபிஷேகம் நடத்தப்பட்டு பின்னர் சிறப்பு பூஜை நடைபெற்றது.  

பூஜைகள் மற்றும் 81 கலச திருமஞ்சன நிகழ்ச்சிகளில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

 பக்தர்களுக்கு  பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகள்  பிரசாதமும் , ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.