வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஜெயந்தி விழாலட்சார்ச்சனை, சத்ருசம்ஹார ஹோமம் நாளை சண்டியாகம் நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, ஐப்பசி மாத சப்தமி திதியை முன்னிட்டு இன்று 31ம்தேதி திங்கள்கிழமை ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனர் ஜெயந்தி விழா நடைபெற்றது.
ஸ்ரீகார்த்தவீர்யார்ஜுனர் ஜெயந்தியை ஒட்டி, இந்தியாவிலேயே முதல் முறையாக ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பச்சைக்கல்லில் 4 அடி உயரத்தில் 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் தனி சன்னதி கொண்டுள்ள ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனர்க்கு சிறப்பு ஹோமம் மற்றும் பால்,தயிர், கரும்புச்சாறு போன்ற 16 விதமான பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், நவகலச திருமஞ்சனம், புஷ்பாஞ்சலி, தீபசேவை ஆகியவை நடைபெற்றன.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்கவும், இழந்த செல்வநிலையைத் திரும்பப் பெற, தோஷம் நீங்கிட, அடகு வைத்தநிலம், நகையை விரைவில் மீட்க, கடன் தொல்லை தீர, பதினாறு வகையான செல்வங்களை பெற்று வாழ்வில் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம்பெற வேண்டி ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனரை மனமுருக வழிபட்டு பிரார்த்தனை செய்தனர்.
முன்னதாக லட்சார்ச்சனையில் 5ம் நாளான இன்று மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி தாயார் சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகளுடன் லட்சார்ச்சனை நடைபெற்றது.
கந்தசஷ்டியை ஒட்டி இன்று சத்ருசம்ஹார ஹோமமும், தன்வந்திரி பீடத்தில் கார்த்திகை பெண்களுடன் உள்ள ஸ்ரீ கார்த்திகை குமரனான முருகபெருமாளுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் நடைபெற்றது. பக்தர்களுக்கு பீடாதிபதி டாக்டர். ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார்.இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
மங்கள சண்டியாகம்
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நாளை நவம்பர் 1ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் மதியம் 2 மணிவரை,நவக்கிரக தோஷங்கள் அகல, நிலம், பூமி, வீடு மனை மற்றும் சொத்து தகராறு வழக்குகள் நீங்கிட, தோஷங்கள்,திருமணத்தடை அகல, மன அமைதி பெற்று,மன சோர்வு நீங்கி,திருஷ்டி, செய்வினை அகன்றிட, கணவன் மனைவி ஒற்றுமை பெற, கடன் தொல்லை அகன்றிட, பதவி, படிப்பு, தொழில், வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் தடைகள் விலகிட வேண்டி மங்கள சண்டியாகம் நடைபெறுகிறது.