வாலாஜாபேட்டைதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்ஐம்பெரும் விழா
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18 வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா நேற்று 9ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 11ம் தேதி முடிய நடைபெறுகிறது.விழாவில் இரண்டாம் நாளான இன்று 10ம்தேதி சனிக்கிழமை மஹா கணபதி, ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீசுதர்சன,ஸ்ரீ மஹாலஷ்மி ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் மூலவர் தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும், 81 கலச அபிஷேகமும், சிறப்பு அலங்காரத்தில் பூஜைகளும் நடைபெற்றது.
விழாவில் மாணவ, மாணவிகள் 62 பேருக்கு எழுது பொருள்கள் , 62 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் லலிதாம்பிகை பீடம் ஸ்வாமிகள், திரைப்பட நடிகர் பூவிலங்கு மோகன், தொழிலதிபர்கள் திருச்சி கணேசன், ருக்மணி, சென்னை ராமாபுரம் ஷீரடி சாய்பாபா ஆலய நிர்வாகி தயாளன், சென்னை மகாலட்சுமி எண்டர் பிரைசஸ் தொழிலதிபர் குணசேகரன், தொழிலதிபர்.ஆற்காடு கு.சரவணன், பெல். பிரபு, ஊட்டி ராஜசேகர் ஆகியோர் உள்பட முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலையில் மேட்டூர் பிரதர்ஸ் ன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஹோமங்கள் மற்றும் பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் தன்வந்திரி மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
நாளை 11ம்தேதி தன்வந்திரி தீர்த்தக்குளம் திறப்பு விழா, 62 தம்பதி பூஜை,62 நாதஸ்வர கலைஞர்களின் இசை விழா,முதலுதவி பொருள்கள் வழங்கும் விழா , மரக்கன்றுகள் நடும் விழா , ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு கலசாபிஷேகம் , பூஜைகள் , அலங்காரம் ஆகியவை நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment