வாலாஜாபேட்டைதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கார்த்திகை மாத சோமாவார பிரதோஷம் சிறப்பு ஹோமம், அபிஷேகம், பூஜை
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, இன்று டிசம்பர் 5ம்தேதி திங்கள்கிழமை கார்த்திகை மாத சோமாவார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.பிரதோஷத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதீஸ்வரருக்கு ருத்ர பாசுபத அஸ்திர ஹோமமும், சிறப்பு அபிஷேக, பூஜைகளும், சிவலிங்க ரூபத்தில் உள்ள 468 சித்தர்களுக்கும், சித்தர்களின் ஞானகுருவாக விளங்கும் ஸ்ரீ கார்த்திகைகுமரனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
இந்த பிரதோஷ ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து, பிரசாதங்களும், பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடம் ஆசிகளும் பெற்று சென்றனர்.
முன்னதாக தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்த விழுப்புரம் மாவட்டம், மேல் சித்தாமூர்,ஜினகாஞ்சி அறச்சாலை தவத்திரு, லட்சுமி சேன பட்டாரக மகா ஸ்வாமிகள், தைலாபிஷேகத்தில் பங்கேற்று தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
----
No comments:
Post a Comment