வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்மூன்று நாட்கள் , மூன்று அபிஷேகங்கள் ஔஷதம் வழங்கும் விழா
உலகிலேயே சைவம்,வைணவம்,ஸ்ரீசாக்தம்,சௌ ரம், கௌமாரம், காணாபத்யம் என ஷண்மதத்திற்குரிய அனைத்து தெய்வ சந்நிதிகளும், நூற்றுக்கணக்கான சித்தர் பெருமக்களும், எண்ணற்ற மகான்களும் பரிபூரணமாக பிரதிஷ்டை ஆகி இருக்கும் பீடம் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஆகும்.
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூன்று நாட்கள் & முத்தான அபிஷேங்களும், ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
இதன்படி வருகிற 22ம்தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு, வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகதலிங்கேஸ்வரருக்கு , 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் , கலச அபிஷேகம் ( சகஸ்ர கலசாபிஷேகம்) நடைபெறுகிறது.
வருகிற 23ம்தேதி வெள்ளிக்கிழமை ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10 மணிக்கு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர்கள் சிறப்பு பால் அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 வாழைப்பழங்கள்,1008 வடை,1008 ஜாங்கிரிகள், 1008 வெற்றிலை, 1008 எழுமிச்சை பழங்கள் அடங்கிய மாலைகள் அணிவிக்கப்பட்டு , துளசி மற்றும் வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற உள்ளது.
அதே போல் வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு திருவோண நட்சத்திரத்தில், மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு , வேறு எங்கும் காணாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
மேற்கண்ட அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் ஔஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது. இந்த அபிஷேக பிரசாதங்கள் பக்தர்களின் பிணிகளை தீர்க்கவல்லது எனவும் , எனவே இந்த முத்தான மூன்று அபிஷேகம், பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று பிரசாதங்களை ஔஷதமாக பெற்று தங்கள் நோய் மற்றும் பிணிகளை தீர்த்து பயன்பெறுமாறும், தெய்வங்களின் ஆசியும் பெற்று பயனடையுமாறு தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று டிசம்பர் 19ம்தேதி ஏகாதசியை முன்னிட்டு உற்சவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு சிறப்பு பூஜைகளுடன் , அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
நாளை முதல் பல்வேறு வகையான ஹோம பூஜைகள் மார்கழி அமாவாசை முன்னிட்டு நடை பெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.

No comments:
Post a Comment