Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Tuesday, December 20, 2022

3 Days Abishegams- Special Homams

வாலாஜாபேட்டை
தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்
மூன்று நாட்கள் மூன்று  அபிஷேகங்கள்,
இலவச ஔஷதம் வழங்கும் விழா முன்னிட்டு
சிறப்பு ஹோமங்கள்
 
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள  ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில்  ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, மூன்று நாட்கள் & முத்தான மூன்று  அபிஷேங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.

இதன்படி  வருகிற 22ம்தேதி வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு,   வேறு எங்கும் இல்லாத வகையில்  பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீமரகதலிங்கேஸ்வரருக்கு ,  1000 கலசங்களில்  புனித நீர் கொண்டு சிறப்பு பூஜைகளுடன் , கலச அபிஷேகம் ( சகஸ்ர கலசாபிஷேகம்)  நடைபெறுகிறது.

 வருகிற 23ம்தேதி வெள்ளிக்கிழமை ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10 மணிக்கு  தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு  1008 லிட்டர்கள் சிறப்பு   பால் அபிஷேகம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 வாழைப்பழங்கள்,1008 வடை,1008 ஜாங்கிரிகள், 1008 வெற்றிலை, 1008 எழுமிச்சை பழங்கள்  அடங்கிய மாலைகள் அணிவிக்கப்பட்டு , துளசி மற்றும் வெண்ணெய் சாற்றி சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற  உள்ளது.

அதே போல் வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு  திருவோண நட்சத்திரத்தில், மூலவர் ஸ்ரீ ஆரோக்யலஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு , வேறு எங்கும் காணாத வகையில் மஹா அன்னாபிஷேகம்  நடைபெறுகிறது.
 
 மேற்கண்ட  அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள்  இலவச ஔஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது.  

முன்னதாக  இந்த சிறப்பு அபிஷேகங்களை முன்னிட்டு இன்று டிசம்பர் 20ம்தேதி பூர்வாங்க  பூஜைகளுடன் , பால கணபதி ஹோமம்  உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

நாளை 21ம்தேதி  புதன்கிழமை  மூலவர் தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர் , ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு  ஹோமங்கள் , பூஜைகள் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.  

No comments:

Post a Comment