வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீமரகதலிங்கேஸ்வரருக்கு சகஸ்ர கலசாபிஷேகம் மலேசியா சங்கரமடம் சத்குரு ஸ்ரீஸ்ரீ ஜெயப்பிரகாஷேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகள் பங்கேற்பு
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி மூன்று நாட்கள் முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
இதன்படி இன்று 22ம்தேதி வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் , வேறு எங்கும் இல்லாத வகையில் பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளுடன் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்த கலசாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்திற்கு தங்கள் கைகளாலேயே கலசங்களை எடுத்து கொடுத்து , ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரரை மனமுருக வழிபட்டு , பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.
முன்னதாக இன்று காலை தன்வந்திரி பீடத்திற்கு வந்த மலேசியா சங்கரமடம், திருஅண்ணாமலையார் தேவஸ்தானத்தை சேர்ந்த ஜகத்குரு சங்கராச்சார்ய சத்குரு ஸ்ரீஸ்ரீ ஜெயப்பிரகாஷேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளுக்கு , பீடத்தின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சகஸ்ர கலசாபிஷேகம், அனுமன் ஜெயந்தி, அன்னாபிஷேகம் ஆகியவற்றிற்கான பூர்வாங்க ஹோம, பூஜைகளை தொடங்கி வைத்து , தன்வந்திரி பீடத்தில் தரிசனம் செய்து , ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றார்.
அப்போது ஈரோடு சுந்தரேச சிவாச்சாரியார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
தன்வந்திரி பீடத்தில் நாளை 23ம்தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை 10 மணிக்கு, தன்வந்திரி பீடத்தில் 9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும்,1008 ஜாங்கிரிகள், வடைகள், எழுமிச்சம்பழம், வெற்றிலை, வாழைப்பழங்களால் மாலைகளும், வெண்ணெய், துளசி சாற்றி சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது.
வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு வேறு எங்கும் இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
மேற்கண்ட அபிஷேக பூஜைகளின் அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஔஷத பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
வேலை எதுவும் செய்வது இல்லை போலும் ஒவொருத்தனுக்கும் பெரிய தொப்பை இருக்கே
ReplyDelete