வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அனுமன் ஜெயந்தி முன்னிட்டு 1008 லிட்டர் பால் அபிஷேகம் பாண்டிச்சேரி சபாநாயகர் பங்கேற்பு
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி மூன்று நாட்கள் முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற்று வருகிறது.
இதன்படி தன்வந்திரி பீடத்தில் இன்று 23ம்தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் 9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோம் பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு மஞ்சள், சந்தனம்,திரவிய பொடி , இளநீர் ஆகியவை கொண்டும், 1008 லிட்டர் பாலில் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
இறுதியில் கங்கா தீர்த்தம் கொண்டும் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்ச நேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 1008 ஜாங்கிரிகள், வடைகள், எழுமிச்சம்பழம், வெற்றிலை, வாழைப்பழங்களால் மாலைகளும் அணிவிக்கப்பட்டும், வெண்ணெய், துளசி மாலை சாற்றி பூஜைகளுடன் மகாதீபாராதனை நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாண்டிச்சேரி சபாநாயகர் ஏம்பலம்.ஆர்.செல்வம் , சித்தூர் ஸ்ருதி பால் உரிமையாளர் கன்னையா உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஹனுமன் ஜெயந்தி விழா ஹோமம், பூஜைகள், அபிஷேகங்களில் ஏராளமான பக்தர்கள், சுற்றுப்புறகிராம நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயரை வழிபட்டு அபிஷேக பால் உள்பட பிரசாதங்களும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.
வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு வேறு எங்கும் இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
மூன்று அபிஷேக பூஜைகளின் அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஔஷத பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment