வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 5 ஹோமங்கள்
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி , நாளை ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை 9 மணி முதல் 12 மணி வரை ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது.
இதன்படி கல்வியில் சிறந்து விளங்க ஸ்ரீ சரஸ்வதி ஹோமம், திருஷ்டி , எதிரிகள் பயம் விலக மஹா சுதர்சன ஹோமம், ஆயுள்பயம் நீங்க ஆயுஷ் ஹோமம், உடல் நோய் , மன நோய் விலக மஹா தன்வந்திரி ஹோமம், வாழ்வில் வளம் பெற குபேர லட்சுமி ஹோமம் ஆகிய ஐந்து ஹோமங்கள் நடைபெறுகிறது.
புத்தாண்டை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் காலை முதல் இரவு வரை பக்தர்களுக்கு தொடர் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.
மேற்கண்ட ஹோமங்களில் பங்கேற்று விசேஷ ஹோம பிரசாதங்களை பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறுமாறு பீடாதிபதி ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.
நாளை மறு நாள் 2ம்தேதி திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு , ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது. முன்னதாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.
முன்னதாக இன்று 31ம்தேதி சென்னை வராஹி பாலன் ஸ்வாமிகள் குடும்பத்தினருடன் தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்தார்.
ஓம் சக்தி மாலை அணிந்து கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த திரளான பக்தர்கள் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவர் தன்வந்திரி பெருமாள் மற்றும் 89 பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
No comments:
Post a Comment