Top Pannel

Top Pannel

ஃப்ளாஷ் நியூஸ்

Sri Danvantri Arogya Peedam, Ct:9443330203

Wednesday, December 21, 2022

Sahasra Kalasabishegam

வாலாஜாபேட்டை 

தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 

நாளை  சகஸ்ர கலசாபிஷேகம்


 வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி  யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி  மூன்று நாட்கள்  முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. 


இதன்படி நாளை 22ம்தேதி  வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு , வேறு எங்கும் இல்லாத வகையில்  பீடத்திலேயே நந்தியுடன்  அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு  சிறப்பு பூஜைகளுடன், கலச அபிஷேகம்) சகஸ்ர கலசாபிஷேகம்  நடைபெறுகிறது.


 நாளை மறுநாள் 23ம்தேதி வெள்ளிக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு  காலை 10 மணிக்கு, தன்வந்திரி பீடத்தில்  9அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும்,1008 ஜாங்கிரிகள், வடைகள், எழுமிச்சம்பழம்,  வெற்றிலை, வாழைப்பழங்களால்  மாலைகளும், வெண்ணெய், துளசி சாற்றி  சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது. 


 வருகிற 26ம்தேதி திங்கள்கிழமை  பகல் 12 மணிக்கு  மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு  வேறு எங்கும் இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. 


 மேற்கண்ட  அபிஷேக பூஜைகளில் , அபிஷேக தீர்த்தம், பால்,  அன்னாபிஷேக அன்னம் ஆகியவை  உள்பட அபிஷேக பிரசாதங்கள்  இலவச ஔஷத பிரசாதங்களாக வழங்கப்பட உள்ளது.  


இந்த சிறப்பு அபிஷேகங்களுக்கான  பூர்வாங்க பூஜைகள் நேற்று 20ம்தேதி  பாலகணபதி ஹோமம் மற்றும் பூஜைகளுடன் தொடங்கியது. இன்று 21ம்தேதி

 மூலவர் தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதலிங்கேஸ்வரர் , ஸ்ரீ ராஜ குபேர சஞ்சீவி ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கான சிறப்பு  ஹோமங்கள் , பூஜைகள் நடைபெற்றது.


மேலும் இன்று மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிவலிங்க  வடிவில்  உள்ள 468 சித்தர்களுக்கும், சித்தர்களின் குருவான  ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  ஸ்வாமி தரிசனம் செய்தனர். 


இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்துள்ளனர்.  






No comments:

Post a Comment