வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அன்னாபிஷேகம் ஸ்ரீ லஷ்மி வராஹருக்கு 1008 கலசாபிஷேகம்
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் , ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி மூன்று நாட்கள் முத்தான மூன்று அபிஷேகங்களும், இலவச ஔஷதம் வழங்கும் விழாவும் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதன்படி இன்று 26ம்தேதி திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு, பத்ம பீடத்தில் 9 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வரும் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு வேறு எங்குமே இல்லாத வகையில் மஹா அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேகத்தை தொடர்ந்து மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் , பக்தர்களுக்கு நோய் தீர்க்கும் மருந்தாக ஓளஷத பிரசாதமாக வழங்கப்பட்டது.
முன்னதாக கோ பூஜை மற்றும் கணபதி பூஜையுடன் ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம் நடத்தப்பட்டு ஸ்ரீ லஷ்மி வராஹருக்கு சிறப்பு பூஜைகளுடன் 1008 கலசங்களில் நிரப்பபட்டிருந்த புனித நீர் மூலம் கலசாபிஷேகமும் நடைபெற்றது..
இன்று 26ம்தேதி திங்கள் கிழமை முதல் 28ம்தேதி முடிய ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜூனருக்கு, கைவிட்ட சொத்துக்கள் , களவு போன பொருள்கள் , இழந்த செல்வங்கள் மீண்டும் கிடைக்கவும், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும், தொலைந்த பொருள்கள் திரும்ப கிடைக்கவும் வேண்டி லட்ச ஜப மஹா யாகம் நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 28ம்தேதி புதன் கிழமை மாலை ஸ்ரீ கார்த்தவீர்யார்ஜுனருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெறுகிறது.
அபிஷேக பூஜைகளின் அபிஷேக தீர்த்தம், பால், அன்னாபிஷேக அன்னம் ஆகியவை உள்பட அபிஷேக பிரசாதங்கள் இலவச ஔஷத பிரசாதங்களாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஸ்ரீ லஷ்மி வராஹர் ஹோமம், கலசாபிஷேகம், மூலவர்ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் அன்னாபிஷேகம் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து
பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment