வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு ஹோமங்கள், ராகு , கேது அன்னாபிஷேகம்
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, இன்று டிசம்பர் 7ம்தேதி புதன்கிழமை கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம் ஆகிய ஹோமங்கள் நடைபெற்றது.
பௌர்ணமியை முன்னிட்டு வேறு எங்கும் இல்லாத வகையில் , சிறப்பு பூஜைகளுடன் ராகு கேதுவிற்கு அன்னாபிஷேகம் நடைபெற்று ,பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் தத்தாத்ரேயர் , அன்னபூரணி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களுடன், அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கும், 468 சிவலிங்க ரூப சித்தர்களுக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
இந்த ஹோமங்கள், அபிஷேகம், பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பிரசாதங்களும், பீடாதிபதி டாக்டர்.ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளிடம் ஆசிகளும் பெற்று சென்றனர்.
முன்னதாக தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்த கரூர், ஸ்ரீ நந்தீஸ்வரர் ஞானபீடம் சுவாமி சித்த குருஜி, தன்வந்திரி பெருமாளை தரிசனம் செய்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றார்.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment