வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி சஞ்சீவினி தீர்த்தக்குளம் திறப்பு விழா ஸ்ரீ புரம் சக்தி அம்மா, ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் பங்கேற்பு
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர்.ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 18 வது ஆண்டு வருஷாபிஷேக விழா, பீடாதிபதி ஸ்ரீமுரளிதரஸ்வாமிகளின் 62 வது ஜெயந்தி விழா, தீர்த்தக்குளம் திறப்பு விழா, ஸ்தல வரலாறு நூல் வெளியீட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை அடங்கிய ஐம்பெரும் விழா கடந்த 9ம்தேதி வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று 11ம் தேதி முடிய நடைபெற்றது.
விழாவில் மூன்றாம் நாளான இன்று 11ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மஹா கணபதி பூஜை, அஷ்ட திக் பாலகர் பூஜை, வருண பூஜை , கங்கா பூஜை ஆகியவை நடைபெற்றது. பின்னர் 62 தம்பதி பூஜையும் , நாதஸ்வர கலைஞர்களின் இசை விழாவும் நடைபெற்று வஸ்திர தானம் வழங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர், ஸ்ரீ புரம் தங்க கோவில் சக்தி அம்மா கலந்து கொண்டு ,21 அடி உயர விஸ்வரூப அஷ்ட நாக கல் கருடர், மூலவர் தன்வந்திரி பெருமாள் ஆகியோருக்கும், கருட கங்கா ஸ்ரீ தன்வந்திரி
சஞ்சீவினி தீர்த்த குளத்திலும், கருடருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தி தீர்த்தக்குளத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளை வாழ்த்தியும், பக்தர்களுக்கு அருளாசி வழங்கியும் பேசினார்.
பூஜைகள் மற்றும் தீர்த்தக்குள திறப்பு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவர் தன்வந்திரி மற்றும் பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்து பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசியும் பெற்று சென்றனர்.
விழாவில் ரத்தினகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், பெங்களூர் மதுசூதனானந்த ஸ்வாமிகள், ஆற்காடு தொழிலதிபர் ஜெ.லட்சுமணன் உள்பட ஆன்மீக பெரியோர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், சுற்றுப்புற கிராம நிர்வாகிகள், வியாபாரிகள், தொழிலதிபர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment